

விக்ரமாதித்யன், ஆரூர்தாஸ் இருவருக்கும் வாலி விருது!
கவிஞர் வாலி விருதுக்காகக் கவிஞர் விக்ரமாதித்யனும், திரைப்படக் கதை வசன ஆசிரியர் ஆரூர்தாஸும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நாற்பது ஆண்டுகளாகக் கவிதை, கவிதை விமர்சனம், சிறுகதை எனத் தீவிரமாக இயங்கிவருபவர் விக்ரமாதித்யன். ‘பாசமலர்’, ‘வேட்டைக்காரன்’, ‘படித்தால் மட்டும் போதுமா?’ உள்பட கிட்டத்தட்ட 500 படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் ஆரூர்தாஸ் தமிழின் வெற்றிகரமான திரைக்கதையாசிரியர் என்று பெயர் பெற்றவர். இருவருமே வாலியின் காலத்திலும் இயங்கியவர்கள் என்பதும் சினிமாவோடு தொடர்புடையவர்கள் என்பதும் கூடுதல் பொருத்தம்!
தமிழுக்கு யார் கொடுப்பார் ப்ரமோ?
அதற்கெல்லாம் மச்சம் இருக்க வேண்டும்! சேத்தன் பகத்தின் சமீபத்திய ‘ஒன் இண்டியன் கேர்ள்’ நாவலை வெளியிட்டவர் யார் தெரியுமா? கங்கணா ரணவத். நாவலைப் படித்துவிட்டுத் தனக்கு அழுகாச்சி வந்துவிட்டது என்று உருகியிருக்கிறார்.
எல்லாம் ‘அமேஸான்’ ஏற்பாடு! கூடவே தங்கள் வலைதளம் மூலமாக நாவல் வாங்கியவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களுக்கு சேத்தன் பகத்தே நேரில் போய் புத்தகத்தைக் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தது. தமிழில் எப்போதப்பா இப்படியெல்லாம் புத்தகங்களுக்கு ‘ப்ரமோ’ கொடுக்கப்போகிறீர்கள்?
மொழியாக்கத்துக்கு மரியாதை!
மொழிபெயர்ப்புகளுக்கென்று பிரத்யேகமாக வெளிவரும் ‘திசை எட்டும்’ காலாண்டிதழ் இந்த ஆண்டும் சிறந்த 5 மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகளை வழங்கிக் கவுரவித்திருக்கிறது.
‘ஜெருசலேம்: உலகத்தின் வரலாறு’க்காக அனுராதா ரமேஷ், சந்தியா நடராஜன்; ‘இந்தியச் சிறுகதைகள்’ நூலுக்காக பிரேம், நீல. பத்மநாபனின் ‘இலை உதிர் காலம்’ நாவல் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ஆன்டி சுந்தரேசன், ‘குற்றால குறவஞ்சி’ கன்னட மொழிபெயர்ப்புக்காக பத்மினி சீனுவாஸ், ‘திருக்குறள் குஜராத்தி மொழிபெயர்ப்புக்காக பி.சி. கோகிலா என்று ஆறு பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கிடா வெட்டி புத்தக வெளியீடு!
எழுத்தாளர்கள் ச.தமிழ்ச் செல்வன், கோணங்கி, முருகபூ பதி சகோதரர்களின் தந்தை எம்.எஸ்.சண்முகம் தன்னுடைய ‘இப்படி யும் சில மனிதர்கள்’ புத்தக வெளியீட் டையொட்டி கோவில்பட்டியையே கலக்கிவிட்டார்.
வீட்டின் முன் பந்தல் போட்டு, கிடா வெட்டியவர் கறி விருந்து போட்டு, கச்சேரி நடத்திப் புத்தகத்தை வெளியிட்டிருக் கிறார்!
நவீன விருட்சம் 100!
தமிழ்ச் சிற்றிதழ் வர லாற்றில் ஒரு சிற்றிதழ் ஓரிரு ஆண்டுகளைக் கடந் தால் அது பெரிய அதிசயம். இந்த நிலையில் எந்த நிறுவனப் பின்புலமும் இல்லா மல் தனிநபராகக் கடந்த 28 ஆண்டுகளாக அழகியசிங் கரால் நடத்தப்பட்டுவரும் ‘நவீன விருட்சம்’ இதழ் நூறாவது இதழைத் தொட்டிருக்கிறது. நூறாவது இதழ் வெளியீட்டுக்கு விழா ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அசோகமித்திரன் வெளி யிட எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக்கொள்ள இருக்கிறார்.