

‘இம்ப்பால் ஃப்ரீ ப்ரஸ்’ நாளி தழின் ஆசிரியர் ப்ரதீப் ஃபான்ஜுபத்தின் இந்த நூல் இன்றைய வட கிழக்கு மாநிலங் களின் வரலாற்றை, அவை சந்தித்து வரும் பிரச்சினை களைத் தீர அலசு கிறது.
அங்குள்ள இனங்களின் உள் ளீடான முரண்பாடு கள், பிரிட்டிஷ் ஆட் சிக்கு முன்பிருந்து இன்றைய மத்திய அரசு வரை இப்பகுதி யைக் கையாண்ட வழிமுறைகள் ஆகியவற்றை விரிவாக எடுத்துக் கூறுகிறது.
தண்ணீர் உட்பட இந்தியாவின் மிக அதிகமான இயற்கை வளங்களைத் தம்மிடத்தே கொண்டுள்ள இப்பகுதியின் எதிர்காலம் இன்றுவரை கேள்விக்குறியாக இருப்பதன் காரணங்களைப் பட்டியலிடும் இந்நூல் அதற்கான பல தீர்வுகளையும் முன்வைக்கிறது. வடகிழக்குப் பகுதியைப் பற்றிய மிகச் சிறந்த அறிமுகம் இந்த நூல்.
- வீ.பா. கணேசன்
த நார்த்ஈஸ்ட் க்வெஸ்டீன் கான்ஃப்ளிக்ட்ஸ் அண்ட் ஃப்ரான்டீயர்ஸ்
ப்ரதீப் ஃபான்ஜுபம்
விலை: ரூ.895 வெளியீடு: ரவுட்லட்ஜ்