மீண்டும் கண்ணதாசன்

மீண்டும் கண்ணதாசன்
Updated on
1 min read

திரைப்படப் பாடலாசிரியராகவும் எழுத் தாளராகவும் தமிழர்கள் நினைவில் நீங்காத இடம் பிடித்த கண்ணதாசனின் இதழியல் முகத்தையும் இலக்கிய முகத்தை யும் காண்பிக்கும் ‘கண்ணதாசன்’ மாத இத ழின் இரண்டு தொகுப்புகள் இவை. இந்த இதழுக்கு முன்பே கண்ணதாசன், ‘முல்லை’, ‘தென்றல்’, ‘தென்றல் திரை’ போன்ற வாரப் பத்திரிகைகளை நடத்தியவர்.

கண்ணதாசன் தன் புகழ்பீடத்தை நிலை நாட்டுவதற்காகவும், தன் பாணியிலான படைப்புகளை வெளியிடுவதற்காகவும் இந்தப் பத்திரிகையை நடத்தவில்லை. சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், பூமணி முதல் என்.ஆர். தாசன் வரை இந்தப் பத்திரிகைக்குப் பங்களித்திருக்கிறார்கள். சீரிய சிறுகதைகள், கவிதைகளுடன், கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இதழ்களுடன் நின்றுபோனது கண்ணதாசன். தமிழகத்தில் அந்தக் காலத்திலேயே பத்தாயிரம் பிரதிகள் விற்று வாசக கவனத்தையும் பெற்றதோடு இலக்கிய சீரிதழ்கள் வரலாற்றிலும் இடம் பிடித்துவிட்டது. மொழிபெயர்ப்புகளுக்காக அதிக பக்கங்களை ஒதுக்கிய முதல் தமிழ் இலக்கிய இதழ் கண்ணதாசன்தான். இராம. கண்ணப்பனின் மேற்பார்வையில் இந்த இதழ் வெளியானது.

கண்ணதாசன் மாத இதழின் இரண்டு தொகுப்புகள் அதே வடிவமைப்பிலேயே தற்போது கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

கண்ணதாசன் மாத இலக்கிய இதழ்,

(மே 1973 மற்றும் ஜூன் 1973)

விலை: ரூ.140 (இரண்டு தொகுப்பும் சேர்த்து)

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை-17

044-2433 2682

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in