

தொ.பரமசிவனின் இந்த நூல், கடந்த நூறாண்டு காலத்தில் தமிழ்ச் சமூகம் சந்தித்த தத்துவப் போராட்டத்தை மீளாய்வு செய்கிறது.
இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரான ஒற்றைக் கலாச் சாரத்தையும் அதன் பின்னணியில் உள்ள சக்திகளையும் எடுத்து இழைஇழையாக அலசும் கட்டுரைகள் பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் வாழ்நாள் போராட்டங்களின் அடிநாதத்தை வலுவாக எடுத்துக் கூறுகின்றன.
இன்றைய சமூக, அரசியல் சூழ்நிலையைத் தமிழ்ச் சமூக மரபின் பின்னணியில் அலசி ஆராயும் இந்நூல் கவனத்துக்குரியது.
- வீ.பா.
‘இந்து’ தேசியம் தொ. பரமசிவன்
ரூ. 130/-
வெளியீடு: கலப்பை பதிப்பகம், சென்னை-26.
94448 38389.