பிறமொழி நூலகம்: இரு சகோதரர்கள்

பிறமொழி நூலகம்: இரு சகோதரர்கள்
Updated on
1 min read

கிரைம் த்ரில்லர் கதைகளில் ஜான் க்ரிஷாம் (John Grisham) மிகப் பிரபலமானவர். அவருடைய சமீபத்திய நாவல் ‘ஸ்பேரிங் பார்ட்னர்ஸ்’ (Sparring Partners).

அவருடைய எழுத்தில் வெளியான நாவல்களில் இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. மல்லாய் சகோதரர்கள் என அழைக்கப்படும் கிரக, ரஸ்டி ஆகிய இருவரும் வெற்றிகரமான இளம் வழக்கறிஞர்கள்.

அவர்களின் தந்தை சிறைக்குச் சென்றதால், அவருடைய செழிப்பான நிறுவனம் மரபுரிமையாக அவர்களிடம் வந்துசேர்கிறது. இந்தச் சகோதரர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் வெறுப்பவர்கள். இவர்களுக்கு இடையிலான மோதலால், நிறுவனம் வீழ்ச்சியடையத் தொடங்குகிறது.

அந்தச் சூழ்நிலையில், நிறுவனத்தின் பங்குதாரர்கள் நம்பும் நபராக டயந்தா பிராட்ஷா எனும் பெண் இருக்கிறார். அவர் மல்லாய் சகோதரர்களைக் காப்பாற்றினாரா அல்லது அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறாரா என்பதற்கான விடையை நோக்கிய பயணமே இந்த நாவல்.

- ஹுசைன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in