நல்வரவு: ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம்

நல்வரவு: ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம்
Updated on
2 min read

பாளையங்கோட்டை சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றும்
இரா.செல்வமணியின் புதிய கவிதைத் தொகுப்பு. இதற்கு முன் ஒரு கட்டுரை நூலையும் கவிதைத் தொகுப்பையும் குறள் சார்ந்த கவிதை நூலையும் இவர் படைத்துள்ளார்.

ஒரு வரவேற்பறையின் வாக்குமூலம்
பாப்பாக்குடி இரா.செல்வமணி,
பாவைமதி வெளியீடு, சென்னை, விலை: ரூ.150
தொடர்புக்கு: 94441 74272

தன்னம்பிக்கை நூல்களை எழுதிவரும் த.ஜான்சி பால்ராஜ், லட்சியத்துடன் வாழ்க்கை நடத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஒருவர் தன் லட்சியத்தை எவ்வாறு தேர்வு செய்வது, அதை எப்படி அடைவது, லட்சியத்தை அடைவதற்குத் தேவையானவை ஆகியவற்றை விவரிக்கும் வகையிலான பத்து கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அனைவருக்கும் இலட்சியம்
முனைவர் த,ஜான்சி பால்ராஜ்
பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை
விலை: ரூ.90, தொடர்புக்கு: 044 28482441

இந்தியாவில் உள்ள முக்கியமான அணைக்கட்டுகளின் வரலாற்றை அரிய தகவல்கள் பலவற்றுடன் சொல்லும் நூல். இந்திய நதிநீர் பிரச்சினைகள், அவை சார்ந்த மோதல்களை விவரித்து அவற்றுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அணைக்கட்டுகள் சொல்லும் அற்புத வரலாறு
ஜெகாதா, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை
விலை: ரூ. 200, தொடர்புக்கு: 94440 47786

வியாபார ரீதியில் பயன்படுத்தப்படும் 200 மருத்துவத் தாவரங்களைப் பற்றிய நூல். இவ்வொரு தாவரத்திலிருந்தும் கிடைக்கும் மருந்துப் பொருட்களைப் பற்றி தனித்தனியே விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் மூலிகை மருத்துவ ஆராய்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுவருகிறார்.

நமது மூலிகைகளும் அவற்றின் முக்கியத்துவமும்
முனைவர் பொன்.காந்தன், மணிமேகலை பிரசுரம், சென்னை, விலை: ரூ.400,
தொடர்புக்கு: 91764 51934

திருக்குறளுக்கு அடுத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல் நாலடியார். நான்கு அடிகள் கொண்ட நானூறு பாடல்களுக்கும் அழகப்பா காரைக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய ம.கார்மேகம் உரை எழுதியுள்ளார்.

நாலடியார் - மூலமும் உரையும்
உரையாசிரியர் -பேராசிரியர் ம.கார்மேகம்
கோவிலூர் மடாலயம், சென்னை
விலை: ரூ.350
தொடர்புக்கு: 98403 58301

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in