

இளமையில் பணி வாழ்க்கையைத் தொடங்கி சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து ஓய்வுபெறும் வயதில் செல்வந்தராக ஆகும் மெதுவான பாதைக்கு மாற்றாக, இளமையாக இருக்கும்போதே பெரும்பணம் சேர்த்து செல்வந்தராவதற்கு வழிகாட்டும். 2011இல் ‘தி மில்லியனர் ஃபாஸ்ட்லேன்’ என்கிற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.
செல்வபுரிக்கான விரைவுப் பாதை,
எம்ஜே டிமார்க்கோ, தமிழில்: PSV குமாரசாமி,
மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்,
புது டெல்லி - 110 002, விலை: ரூ.450,
தொடர்புக்கு: 011-2325 8319, 2325 5558
தமிழ் நாடக வரலாற்றை அறிமுகப்படுத்தும் நூல். தொல்காப்பியத்திலும் சிலப்பதிகாரத்திலும் நாடகத்துக்கு இடமளிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி, தமிழ்ச் சூழலில் நாடகக் கலையின் பரிணாம வளர்ச்சி படிப்படியாக விவரிக்கப்பட்டுள்ளது. சங்கரதாஸ் சுவாமிகள் போன்ற ஆளுமைகளால் விளைந்த நாடக மறுமலர்ச்சி, திராவிட இயக்கத்தின் தாக்கம், தற்கால நாடகச் சூழல் ஆகியவை குறித்த தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் நாடக இயக்கம்,
முனைவர் ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம்
சென்னை - 600 049, விலை: ரூ.180
தொடர்புக்கு: 044-2650 2086, 94441 91256
மூத்த பத்திரிகையாளரான அமுதன், மாமல்லபுரத்தின் பல வரலாற்று மர்மங்களை மக்களுக்கு எளிதாக விளக்கும் வகையில் சுவைபட எழுதியிருக்கிறார். இந்த வரலாற்றுக்கு உறுதியான சான்றுகளை அவர் இதில் அளித்துள்ளார் என்பது கவனம்கொள்ளத்தக்கது.
மாமல்லபுரம் வரலாற்றுப் புதிர்களும் விடைகளும்
அமுதன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை.
விலை: ரூ.200, தொடர்புக்கு: 044-2434 2926
ஈழத்திலிருந்து பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்து, பாரிஸ் நகரில் வசித்துவரும் கோ.நாதன் கவிதை, கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார். இது அவருடைய மூன்றாம் கவிதைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பில் 60 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
அரவம் புணர்ந்த அடவி, கோ.நாதன்
நடு வெளியீடு, பிரான்ஸ், விலை: ரூ.135
மின்னஞ்சல்: editornadu@gmail.com
சென்னை அரசு சட்டக் கல்லூரியில் பட்டம்பெற்றவரும் ஆன்மிகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்ப
வருமான த.திலகர் எழுதிய ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அன்றாட வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளிலிருந்தே இந்தக் கதைகளை இவர் எழுதியுள்ளார்.
வாழ்வியல் கதைகள், த.திலகர்
விஜயா திலகர் பதிப்பகம்,
தமிழ்ச் சங்கம் ரோடு, மதுரை - 625 001
விலை: ரூ.150, தொடர்புக்கு: 9443336708