

தேவாரத்தை எளிய தமிழில் அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் முயற்சியின் ஆரம்ப கட்டமாக தேவாரம், திருமுறைகள் உள்ளிட்ட சமய இலக்கியங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார் சூலூர் கலைப்பித்தன். அவற்றின் தொகுப்பே இந்நூல்.
சங்க சமய இலக்கியங்களில் தமிழ்
சூலூர் கலைப்பித்தன், வெளியீடு: படி வெளியீடு
விற்பனை உரிமை: டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை. விலை: ரூ.150
தொடர்புக்கு: 044-4855 7525, 87545 07070
எழுபது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் சுயமுன்னேற்ற நூல்களை எழுதிப் புகழ்பெற்றவர் அப்துற்-றஹீம். சுயமுன்னேற்றம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகையான நூல்களை எழுதியுள்ளார். தன்னுடைய நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
அப்துற் - றஹீம் முன்னுரைகள்
தொகுப்பு: பாத்திமா ஷாஜஹான்
வெளியீடு: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
தியாகராய நகர், சென்னை - 600 017
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044-2834 3385, 94440 47786
முப்பதாண்டுகளுக்கு முன்பே மந்திரவாத மாயஜாலக் கதைகள் பலவற்றை எழுதியிருப்பவரான ஞானி, இக்காலச் சிறார்களையும் இளைஞர்களையும் கவரும் வகையில் இந்தப் பரபரப்பு மிக்க மாயஜால நாவலைப் படைத்துள்ளார்.
மந்திரபூமி, ஞானி
வெளியீடு: குகன் வெளியீடு
ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018
விலை: ரூ.300, தொடர்புக்கு: 98846 84666
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களை, கடலை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் மீனவ மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்யும் சிறுகதைகளின் தொகுப்பு இது. குறும்பனை சி.பெர்லின், டி.அருள் எழிலன் உள்ளிட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 12 எழுத்தாளர்களின் கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
கடலோரக் கதைகள்,
தொகுப்பாசிரியர்: இரையுமன் சாகர்
கடற்கரைப் பதிப்பகம், இரையுமன்துறை, கன்னியாகுமரி மாவட்டம் - 629 176
விலை: ரூ.140, தொடர்புக்கு: 75581 62827
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு 2010ஆம் ஆண்டு கோவையில் நடத்திய ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்’டில் கருணாநிதி ஆற்றிய உரை, செம்மொழி குறித்துப் பிற தருணங்களில் அவருடைய உரைகள், அறிக்கைகள், கட்டுரைகள், கடிதங்கள், கவிதைகள், நேர்காணல் ஆகியவை இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
செம்மொழியே; எம் செந்தமிழே!
கலைஞர் மு.கருணாநிதி
வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்
பிரகாசம் சாலை, சென்னை - 600 108
விலை: ரூ.600, தொடர்புக்கு: 044-2526 7543