நினைவில் புரளும் ஜே.கே.

நினைவில் புரளும் ஜே.கே.
Updated on
1 min read

ஜெயகாந்தன் தொடர்பான அநேக நூல்கள் தமிழ்ச் சூழலில் வந்து கொண்டேயிருக்கின்றன.

அப்படியொரு நூலான இது பெருங்கடலில் ஒரு தனித் துளியாகச் சேர்ந்திருக்கிறது.

ஜெயகாந்தனுடனான நேரடி உரையாடல் தகவல்கள், ருசிகரச் சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே ஒரு சித்திரத்தைத் தீட்டுகிறார் நூலாசிரியர் நவபாரதி.

ஜெயகாந்தனின் கதை உலகம் பற்றிய பார்வைகள், விமர்சனங்கள், சக எழுத்துக்கும் ஜே.கே.வின் எழுத்துக்குமான ஒப்பிடல்கள் என ஒரு நீண்ட கட்டுரையும் நூலில் இடம்பெறுகிறது.

ஜே.கே. மறைந்து ஓராண்டைக் கடந்துவிட்ட நிலையில் அவரது நினைவைப் போற்ற உருவான நூல் என்பது இதன் சிறப்பு.

ஜெயகாந்தனின் பர்ணசாலை

நவபாரதி

விலை ரூ.100

செண்பகம் பதிப்பகம், தி. நகர், சென்னை 17

தொலைபேசி: 044-24331510

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in