

அருந்ததிய சமூகத்தவர் தமிழகத்தில் வீரமும் செழிப்பும் மிக்கவர்களாக வாழ்ந்தவர்கள் என்பதையும் அவர்கள் தமிழ் நிலத்தின் ஆதிக் குடிகள் எனும் கூற்றையும் இனவரைவியல் குறிப்புகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட சான்றுகளைக் கொண்டு ஆய்வுபூர்வமாக விளக்கும் ஆறு கட்டுரைகளின் தொகுப்பு.
தமிழக அருந்ததியர்: வரலாறும் வாழ்வும்
முனைவர் ச.சீனிவாசன், வெளியீடு: பாலாஜி இண்டர்நேஷனல் பதிப்பகம், புது டெல்லி.
விலை: ரூ.200, தொடர்புக்கு: 99112 23484
2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், மூத்த ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி அனைத்துத் துறை அமைச்சர்களுக்கும் அந்தந்தத் துறைகளில் நிலவும் மக்களின் பிரச்சினைகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் விளக்கி எழுதிய கடிதங்களின் தொகுப்பு. ‘உள்ளாட்சி முரசு’ நாளேட்டில் வெளியான கடிதங்கள் இப்போது நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
மாண்புமிகு..., டி.எஸ்.எஸ்.மணி
வெளியீடு: உள்ளாட்சிப் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.200, தொடர்புக்கு: 90257 06355
அகில இந்திய கிஸான் சபா என்னும் விவசாயிகள் சங்க அமைப்பின் தலைவர்களில் ஒருவரான Z.A.அஹம்மது 1969இல் விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் மாநாட்டில் ஆற்றிய தலைமை உரையின் தமிழாக்கம்.
இந்திய விவசாயப் போராட்டங்களின் வீர வரலாறு
டாக்டர் Z.A.அஹம்மது, தமிழில் ஏ.எம்.நடராஜன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
விலை: ரூ.50, தொடர்புக்கு: 044-2625 1968, 2652 8410, 4860 1884
நோபல் பரிசுபெற்ற கவிஞரும் இந்திய தேசிய கீதத்தைப் படைத்தவருமான ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்தில் எழுதிய ‘சித்ரா’ என்னும் நாடகம், கவிதை நாடக வடிவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சித்ரா, கவிஞர் ஜெ.அமலநாதன்
வெளியீடு: குமரன் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.60, தொடர்புக்கு: 044-2435 3742, 2431 2559
ஆல்பர்ட் காம்யூவின் ‘தி பிளேக்’, மகாசுவேதா தேவியின் ‘1984இன் அம்மா’, தோப்பில் முகமது மீரானின் ‘அஞ்சுவண்ணம் தெரு’, இரா.முருகவேலின் ‘மிளிர்கல்’, பிரியா விஜயராகவனின் ‘அற்றவைகளால் நிரம்பியவன்’ உள்ளிட்ட கதைகள், தாகூரின் நாடகம், தேசியக் கல்விக்கொள்கை குறித்த பேராசிரியர் சந்திரகுருவின் நூல் ஆகியவை குறித்து பேராசிரியர் விஜயகுமார் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு.
புனைவிலக்கிய நதியில் நீந்தி
பேரா.பெ.விஜயகுமார், வெளியீடு: கருத்து = பட்டறை, மதுரை.
விலை: ரூ.170, தொடர்புக்கு: 98422 65884