

சீனாவைச் சேர்ந்த இளம் பெண் தொழில்நுட்ப வல்லுநர் ஷி ஷியா மிங் (Xi Xiao Ming) இந்தியாவுக்கு வந்து ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கரின் ‘வாழும் கலை’ இயக்கத்தில் இணைந்துள்ளார்.
இவர் தற்போது பெங்களூருவில் உள்ள வாழும் கலை ஆசிரமத்தில் வசித்துவருகிறார். 1,400 ஆண்டுகளுக்கு முன் புத்த மதத்தின் ஆதி வடிவத்தையும் தொன்மை வாய்ந்த பெளத்த நூல்களையும் தேடி இந்தியாவுக்கு வந்தவர், சீனப் பயணியும் பெளத்த பிக்குவுமான யுவான் சுவாங் (Xuan Zang). அவரைப் பின்பற்றி இந்தியாவுக்கு வந்துள்ள ஷி ஷியா மிங்கின் கதை இது.
உலகமே இணையத்தால் இணைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் யுகத்தைச் சேர்ந்த இளம் பெண், தன் மூதாதையரின் அடியொற்றி இந்தியாவுக்குப் பயணித்தது ஏன் என்னும் கேள்விக்கான விடையை நோக்கிய பயணமே இந்த நாவல்.
இந்த நாவலை எழுதியுள்ள ரவி வல்லூரி இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டுத் தற்போது இந்திய ரயில்வேயில் பணியாற்றிவருகிறார்.
‘வாழும் கலை’ இயக்கத்தில் ஆசிரியர்களுள் ஒருவராகச் செயல்பட்டுவருகிறார். ஓடிடி தளங்களில் படமாக்குவதற்காக மிங்கின் கதையை எழுதித்தருமாறு கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கதையை நாவலாக எழுத விரும்பிய வல்லூரி, அதைச் செய்து முடித்துள்ளார்.
ஆர்ட் ஆஃப் வார் டு ஆர்ட் ஆஃப் லிவிங்
(Art of War to Art of Living)
ரவி வல்லூரி
வெளியீடு: ஏ.கே.எஸ் பப்ளிஷிங் ஹவுஸ், புது டெல்லி -
110092
விலை: ரூ.219
தொடர்புக்கு: 098714 11823