

வெக்டர் கன்சல்டிங் குரூப் என்னும் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் இந்த வணிக நாவலை எழுதியிருக்கிறது. ஹைகியர் என்னும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கதையே இந்த நாவல்.
அந்த நிறுவனத்தின் இரண்டு முக்கிய மேலாளர்கள் பணி வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களின் போராட்டங்களையும் நாவல் விவரிக்கிறது. இதன் வழியாக இந்திய வாகனத் தொழில்துறையில் பல நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
அதோடு கொள்முதல், விநியோகம், விற்பனை ஆகியவை சார்ந்து நிறுவனங்கள் கொண்டிருக்கும் அடிப்படைப் பார்வையையே கேள்விக்குட்படுத்துகிறது.
தொழிற்சாலைகளில்/ நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட துறைகளின் கண்ணோட்டத்துடனேயே கையாளும் அணுகுமுறைக்கு மாற்றாக ஒட்டுமொத்த அமைப்பு சார்ந்த அணுகுமுறையுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டியதன் முக்கியத்துவமும் அதனால் விளையும் பயன்களும் இந்த நாவலில் வலியுறுத்தப்பட்டுள்ளன.
‘Apparent In Hindsight' என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, இரண்டு பதிப்புகளைக் கண்ட நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
அனுபவம் தந்த தெளிவு வெக்டர் கன்சல்டிங் குரூப்
தமிழில்: சுப.மீனாட்சி சுந்தரம்
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்,
சென்னை - 600 014
விலை: ரூ.250
தொடர்புக்கு: 044 2813 2863