

கல்லூரிப் பேராசிரியர் மு.அருணகிரி, கம்பன் கழகத்தில் கம்ப ராமாயணம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் சொற்பொழிவு ஆற்றுவார். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து உரைகளின் தொகுப்பு.
இராமாயணச் சாரல்
முனைவர் மு.அருணகிரி
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 600 049, விலை: ரூ.225,
தொடர்புக்கு: 044 2650 7131
உலக வரலாறே தொன்மை வாய்ந்த தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்றுள்ள தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல்.
தெற்கிலிருந்து உலக சரித்திரம் (கீழடி முதல் கல்வராயன் மலை வரை), ப.பாலசுப்பிரமணியன்
வெளியீடு: சங்கர் பதிப்பகம், சென்னை-600 049
விலை: ரூ.200, தொடர்புக்கு: 044 2650 2086
கவிஞர் வண்ணை வளவனின் ஆறாவது கவிதைத் தொகுதி இது. 1978-ல் இவருடைய முதல் தொகுதி ‘வண்ணைவளவன் கவிதைகள்’ வெளியாகியுள்ளது. ஐந்தாம் தொகுதியான ‘நிழலோவியம்’
1990-ல் வெளியானது.
துளிர்க்கும் காலம், வண்ணை வளவன்
வெளியீடு: செந்தூரம், சென்னை-600 112
விலை: ரூ.120, தொடர்புக்கு: 94440 90037
தமிழ்நாடு அரசின் முன்னாள் அலுவலரும் கதைகள், கட்டுரைகளை எழுதிவருபவருமான
எஸ்.சுந்தரேசன் பல வார இதழ்களிலும் மாத இதழ்களிலும் எழுதிய 35 சிறுகதைகளின் தொகுப்பு.
என் இனிய பூங்காற்றே,
எஸ்.சுந்தரேசன்
வெளியீடு: சோழன் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை-600 042, விலை: ரூ.175,
தொடர்புக்கு: 98403 53341
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் க.சண்முகம், துக்க வீடுகளில் ஒப்பாரி பாடி ஆடும் நாட்டுப்புறக் கலைஞர் ப.அக்கு உள்ளிட்ட 43 ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. அனைவரும் சேலம் மாவட்டத்தை, குறிப்பாக வாழப்பாடியையும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் சேர்ந்தவர்கள்.
விந்தை மனிதர்கள், பெ.பெரியார்மன்னன்
வாழப்பாடி-636 115, விலை: ரூ.135
தொடர்புக்கு: 96009 69118
தொகுப்பு: கோபால்