

தமிழ்த் திரைத் துறையில் முக்கியமான கதை ஆசிரியர் கலைஞானம். சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட தமிழின் முக்கியமான நடிகர்களை வைத்துப் படங்கள் தயாரித்துள்ளார். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் திரைத் துறையில் இயங்கியவர். இவர் திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்பதைத் தாண்டி பீம்சிங், பாரதிராஜா, பாக்யராஜ் போன்ற இயக்குநர்கள் பலரின் திரைக்கதை விவாதங்களில் பங்குகொண்டுள்ளார்.
திரை அனுபவத்தின் அடிப்படையில் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு ‘கேரக்டர்’. இதில் திரை நட்சத்திரங்கள் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். பழம்பெரும் பாடகி எம்.எல்.வந்தகுமாரியைத் தான் திருமணம் செய்துகொள்ள இருந்த சுவாரசியமான நிகழ்ச்சியை கலைஞானம் இந்த நூலில் பகிர்ந்திருக்கிறார்.
திரைத் துறையில் அறிமுகமாவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது.
அதனால், வசந்தகுமாரியின் கணவர் என்ற சிபாரிசில் தான் ஒரு சூப்பர் ஸ்டாராக ஆகிவிட்டதாகக் கனவு கண்டதையும் சுயக்கேலி செய்துகொண்டிருக்கிறார். மின்னும் நட்சத்திரங்களின் அறியாத் துயரங்களும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. கலைஞானத்தின் நேரடிப் பேச்சு போன்ற எழுத்து நடை, கடந்த காலத்தைச் சித்தரிப்பதில் உள்ள ஓர்மைத் திறன் எல்லாம் இந்தப் புத்தகத்தின் சிறப்புகள்.
- ஜெயகுமார்
கேரக்டர் (பாகம்-1)
வெளியீடு : நக்கீரன் பதிப்பகம்
விலை ரூ. 280
தொடர்புக்கு: 044 43993029