

இசை, நடனம், நடிப்பு, ஓவியம் என அத்தனை கலைகளும் சங்கமிப்பது சினிமாவில். ஆனால் நெடுங்காலமாக சினிமா என்பது மலினமான பொழுதுபோக்கு ஊடகமாகவே கருதப்படுகிறது.
இந்தப் பார்வையைப் புரட்டிப்போட்டு, திரைப்படத்தைப் பயிற்றுக் கருவியாக மாற்ற முடியும் என்பதை ‘திரைப்பாடம்’ புத்தகம் காட்டுகிறது.
சார்லி சாப்ளினின் ‘தி கிரேட் டிக்டேட்டர்’, ஹிட்ச்காக்கின் ‘சைக்கோ’, பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ எனப் புகழ் பெற்ற 31 திரைப்படங்களை ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் அலசுகிறது இப்புத்தகம்.
இந்தத் திரைப்படங்கள் சமூக- கலாச்சார- அரசியல் தளங்களில் ஏற்படுத்திய தாக்கமும் இப்புத்தகத்தில் அலசப்படுகிறது.
'தி இந்து’ நாளிதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.
திரைப்பாடம்
டாக்டர் ஆர். கார்த்திகேயன்
விலை: ரூ. 120
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,
ராயப்பேட்டை, சென்னை - 14
தொலைபேசி: 044- 4200 9603
மின்னஞ்சல்: support@nhm.in