நல்வரவு: மனம் அது செம்மையானால்

நல்வரவு: மனம் அது செம்மையானால்
Updated on
2 min read

மனம் என்பது மனிதர்களுக்கு என்றுமே புரியாத புதிர்தான். மனம் எங்கிருக்கிறது? மூளையிலிருந்துதான் செயல்படுகிறதா? நினைவுகள், உணர்வுகள், கனவுகள் எல்லாம் எப்படி உருவாகின்றன? மனநோய் என்பதென்ன? இப்படி மனம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான, ஆன்மிகரீதியான பதில்களை அளிக்கிறது இந்நூல்.

மனம் அது செம்மையானால், க.மணி
வெளியீடு: அபயம் பப்ளிஷர்ஸ், கோவை - 641 015
விலை: ரூ.200, தொடர்புக்கு: 90956 05546

சிவகங்கை மாவட்டம் கட்டுக்குடிபட்டி கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட நூலாசிரியரின் முந்தைய படைப்புகள், ‘இந்து தமிழ்’, ‘தினத்தந்தி’, ‘கல்கி’, ‘கணையாழி’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. 1990-களில் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் சிலரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களுடன் புனைவு கலந்து இந்த நாவலைப் படைத்துள்ளார் ஆசிரியர். சிறுவர்களிடம் காணப்படும் விளையாட்டு ஆர்வத்தையும் திறமையையும் இனம்கண்டு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாவல் வழியாக வலியுறுத்தியிருக்கிறார்.

உதை பந்து, ஏ.ஆர்.முருகேசன், வெளியீடு: வெற்றிமொழி வெளியீட்டகம், திண்டுக்கல் - 624 001
விலை: ரூ.120, தொடர்புக்கு: 97151 68794

மூத்த இதழாளர் கவிஞர் அ.முத்துவேலன் மரபுக் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். 1960-களிலிருந்து சிறுகதைகளையும் எழுதிவருகிறார். அவர் வெவ்வேறு காலகட்டத்தில் பல்வேறு இதழ்களில் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு இது. மதுரையில் வாழ்ந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் கேள்விப்பட்ட விஷயங்களையும் இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்திருக்கிறார்.

எங்கிருந்தோ வந்தான், கவிஞர் அ.முத்துவேலன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,
சென்னை - 600 078, விலை: ரூ.90,
தொடர்புக்கு: 87545 07070

பெரியகுளத்தைச் சேர்ந்தவரான சித்ரா சிவன், அம்முராகவ் என்னும் புனைபெயரில் படைப்புகளை எழுதிவருகிறார். வார இதழ்களிலும் இணைய இதழ்களிலும் கதை, கவிதை, கட்டுரை ஆகியவற்றை எழுதிவருகிறார். அவர் நெடுநாட்களாக எழுதிவந்த கவிதைகளைக் கொண்டு இந்த முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிலா, அம்முராகவ்

வெளியீடு: பி ஃபார் புக்ஸ், சென்னை - 600 042
விலை: ரூ.120, தொடர்புக்கு: 90424 61472

‘சிறிது சிறிதாய் பெரிது பெரிதாய்’ நூலின் ஆசிரியர், தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஏற்கெனவே சில நூல்களை எழுதியுள்ளார். இந்த நூலை ‘தொகுப்பு நூல்’ என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். நூல்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றில் படித்துத் தெரிந்துகொண்ட தகவல்கள், செய்திகளை வைத்து, அவற்றின் வழியாக வாசகர்களுக்குப் புதிய கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் இந்த நூலைப் படைத்துள்ளார்.

சிறிது சிறிதாய் பெரிது பெரிதாய்
தஞ்சை எழிலன், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 600 104, விலை: ரூ.125,
தொடர்புக்கு: 044-2435 7832
தொகுப்பு: கோபால்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in