

அந்தச் சம்பவத்தை எப்படி மறக்க முடியும்? 2001-ம் ஆண்டு ஓர் அதிகாலைப் பொழுதில் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட சம்பவமும், அப்போது காவல்துறையும் அரசும் நடந்துகொண்ட விதமும் உலகெங்கும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தின. நள்ளிரவில் கருணாநிதி கைதுசெய்யப்பட்டபோது அங்கே இருந்த சன் டி.வி. செய்தியாளர் கே.கே. சுரேஷ்குமாரின் நேரடி சாட்சியமாக இந்தப் புத்தகம் உருவாகியிருக்கிறது. அப்போது நடந்த சம்பவங்கள் மட்டுமல்லாமல் பின்னணித் தகவல்கள், பல்வேறு தலைவர்கள், பத்திரிகைகளின் எதிர்வினைகள் என்று எல்லாமே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
- ஆபி
நள்ளிரவில் கலைஞர் கைது: ஒரு நிருபரின் நேரடி சாட்சியம்
கே.கே. சுரேஷ்குமார்
விலை: ரூ. 220
வெளியீடு: யாழ்கனி பதிப்பகம்.
தொடர்புக்கு: 98400 78307, மின்னஞ்சல்: yazhkani2016@gmail.com