கமல் உத்தம வில்லனா?

கமல் உத்தம வில்லனா?
Updated on
1 min read

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் எதிர்கொண்ட எதிர்ப்பு உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹாலிவுட்டிலேயே அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களை விமர்சனம் செய்து படங்கள் எடுக்கப்படும்போது கமல் ஏன் அமெரிக்க ஆராதனை ஹாலிவுட் படம் ஒன்றை எடுக்க விரும்பினார் என்று யமுனா ராஜேந்திரன் இந்த நூலில் கேள்வி எழுப்புகிறார். கூடவே, இஸ்லாமியர் மீது கமல் தனது மற்ற படங்களிலும் குத்தும் முத்திரை பற்றியும் விவாதிக்கிறார் யமுனா ராஜேந்திரன். எனினும், ‘கதாநாயகனின் கொலையுணர்வுக்கான காரணங்கள் இலட்சியமயப்படுத்தப்பட்ட அளவில் உணர்ச்சிவசமாகக் காட்சிமயப்பட்ட அளவில் கதாநாயகனின் மனமாற்றம் காட்சிவயப்படுத்தப்படவோ இலட்சிய மயப்படுத்தப்படவோ இல்லை’ என்பது போன்ற நடை சற்றே ஆயாசம் ஏற்படுத்துகிறது.

-ஆபி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in