

சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவருபவர் ப.கல்பனா. இது அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. கல்பனாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘பார்வையிலிருந்து சொல்லுக்கு’ 1999-ல் வெளியானது. சீன, ஜப்பானிய, கொரியக் கவிதைகளை கல்பனா மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். இவருடைய பல கவிதைகள் பெண்ணியம் தொடர்பான கவிதை நூல்களில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன.
நானொரு நேனோ துகள், ப.கல்பனா
வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், சென்னை - 600106, விலை: ரூ.150, தொடர்புக்கு: 93828 53646
குட்டி மோச்சு என்னும் சிறுவன் யாரைப் பார்த்தாலும் கதை கேட்கிறான். அவன் கேட்கும் கதைகளின் கதையாக இந்த சிறார் நாவலை எழுதியுள்ளார் இவள் பாரதி. ‘தக்காளியின் கதை’, ‘வானவில் கதை’, ‘ஓவியங்களின் கதை’ என கதைக்குள் வரும் கதைகள் நீள்கின்றன. குழந்தைகளுக்குரிய பேச்சுமொழியில் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல்.
குட்டி மோச்சு, இவள் பாரதி
வெளியீடு: நம் கிட்ஸ் பதிப்பகம், சென்னை - 93
விலை: ரூ.120, தொடர்புக்கு: 95661 10745
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு நக்கீரரால் 188 அடிகளில் எழுதப்பட்ட ‘நெடுநல்வாடை’ பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. அதைப் போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து, அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் களத்திலும் சிந்தனைத் தளத்திலும் ஓயாமல் இயங்கிவருவதை முன்னிறுத்தி 288 அடிகளில் எழுதப்பட்ட நீள் கவிதை.
நெடுநல்வாடான், யாழன் ஆதி
வெளியீடு: அறம் பதிப்பகம்,
ஆரணி தாலுகா-632 316, விலை: ரூ.50,
தொடர்புக்கு: 91507 24997
1,500 கிரைம் நாவல்களை எழுதியிருக்கும் ராஜேஷ்குமாரின் ஆன்மிக நூல். சித்தர்கள் குறித்த கற்பிதங்களைக் களைந்து, அவர்கள் குறித்த உண்மைகளை, அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களை முன்வைத்து விரிவாகவும் தனக்கேயுரிய விறுவிறுப்பான நடையிலும் எழுதியுள்ளார்.
சித்தர்கள் பித்தர்களா, ராஜேஷ்குமார்
வெளியீடு: அமராவதி, சென்னை - 33
விலை: ரூ.240, தொடர்புக்கு: 94441 69725
குடந்தை பாலு என்னும் த.சீ.பாலு கதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் எனப் பல தளங்களில் இதுவரை 22 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆசிரியர் பணியில் 33 ஆண்டுகள் அனுபவம் பெற்ற குடந்தை பாலு, இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும், தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலும் எழுதிய 29 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
வெற்றியைப் பற்றுவோம், குடந்தை பாலு
வெளியீடு: சங்கர் பதிப்பகம், சென்னை - 600 049
விலை: ரூ.160, தொடர்புக்கு: 94441 91256