Published : 30 Apr 2022 07:47 AM
Last Updated : 30 Apr 2022 07:47 AM

நல்வரவு: வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும்

பள்ளி ஆசிரியராக முப்பது ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் பா.தென்றல், தன்னுடைய பணி அனுபவங்களை முன்வைத்து மாணவர்களை வழிநடத்துவது குறித்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். திருச்சியிலிருந்து வெளியாகும் ‘இனிய நந்தவனம்’ இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.

வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும், பா.தென்றல், வெளியீடு: இனிய நந்தவனப் பதிப்பகம்,
திருச்சி - 620003, விலை: ரூ.150, தொடர்புக்கு: 94432 84823

இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலகக்காரச் சிந்தனையாளரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்றவருமான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் திருமணம், பாலியல் உறவு ஆகியவை குறித்த விக்டோரிய ஒழுக்க மதிப்பீடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் எழுதிய ‘மேரேஜ் அண்ட் மாரல்ஸ்’ (Marriage and Morals) என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.

திருமணமும் ஒழுக்க நெறிகளும்
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்
தமிழில்: சி.ஸ்ரீராம், வெளியீடு: காவ்யஸ்ரீ பப்ளிஷர்ஸ், கோவை - 641005
விலை: ரூ.350, தொடர்புக்கு: 82487 45334

சாகித்ய அகாடமி விருதுபெற்ற தெலுங்கு எழுத்தாளர் கோபியால் தெலுங்கில் அறிமுகம் செய்யப்பட்ட ‘நானிலு’ என்னும் வகைமையை அடியொற்றி ‘தன்முனைக் கவிதைகள்’ என்னும் புதிய வகைமையில் தமிழில் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு. இது அன்புச்செல்வியின் முதல் நூல்.

லாந்தர் விளக்கின் வெளிச்ச சிதறல்கள்
அன்புச்செல்வி சுப்புராஜு
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,
சென்னை - 600 011, விலை: ரூ.120
தொடர்புக்கு: 94446 40986

நாடகக் கதாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்பன உள்ளிட்ட பன்முகத் திறமைகள் கொண்ட எஸ்.எல்.நாணு, தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். கல்கத்தாவில் தொடங்கிய பள்ளி வாழ்க்கை, சென்னை விவேகானந்தா கல்லூரி அனுபவங்கள், தன்னுடைய நாடக அனுபவம், பெற்ற சாதனைகள், சந்தித்த பிரபலங்களைப் பற்றி இந்நூலில் எடுத்துரைத்திருக்கிறார்.

தவற விட்ட தருணங்களும் – மீறி வந்த அனுபவங்களும்! , எஸ்.எல்.நாணு
வெளியீடு: குவிகம் பதிப்பகம்,
சென்னை- 600 078, விலை: ரூ.170,
தொடர்புக்கு: 89396 04745

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் சசிகலா, கரோனா ஊரடங்குக் காலத்தில் எழுதிய நாவல். குடும்பத்தையும் உறவுகளையும் அடிப்படையாகக் கொண்ட கதையில் சமூகநீதி, சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரிப்பது, பெண்ணுரிமைக்குக் குரல்கொடுப்பது என முற்போக்கான கருத்துகளைக் கதாபாத்திரங்களின் வழியாக எதிரொலிக்க வைத்துள்ளார்.

அரவு, சசிகலா தளபதி விஜயராஜா
வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 600 014, விலை: ரூ.125
தொடர்புக்கு: 044-2848 2441, 4215 5309

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x