காலத்தால் அழியா வரலாறு

காலத்தால் அழியா வரலாறு
Updated on
1 min read

47 ஆண்டுகளுக்குப் பிறகு 2016-ல் மறுபதிப்பாக வெளிவந்திருக்கிறது. பயண இலக்கியம் என்கிற புதிய இலக்கிய வகைமையை தமிழில் உருவாக்கிய ஏ.கே.செட்டியாரின் உலகம் சுற்றிய பயணமென்பது வெறும் சுற்றுலாவாக இல்லாமல், வரலாற்று ஆவணங்களைத் தேடிக் கண்டெடுக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்தது. அவரது தளராத பணிகளால்தான் காந்தி பற்றிய ஆவணப்படம், தென்னாப்பிரிக்கப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவு, சுதேசமித்திரன் இதழின் தலையங்கங்கள் என அனைத்தையும் இன்றும் நம்மால் வாசிக்க முடிகிறது. அரிய இந்நூலைத் தேடியெடுத்து மீண்டும் பதிப்பித்திருக்கிறார் பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.

புண்ணியவான் காந்தி
தொகுப்பு: ஏ.கே.செட்டியார்
விலை: ரூ. 200.
வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை- 83.
தொலைபேசி: 044 - 2489 6979.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in