நல்வரவு | இப்படித்தான் ஜெயித்தார்கள்: ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள்

நல்வரவு | இப்படித்தான் ஜெயித்தார்கள்: ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள்
Updated on
2 min read

பத்திரிகையாளர் மோ.கணேசன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளிடம் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு இது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நீதியரசர் கே.சந்துரு, அமுதா ஐ.ஏ.எஸ், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், வீணை காயத்ரி, வானிலை ஆய்வாளர் ரமணன், எழுத்தாளர் ராஜேஷ்குமார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சேலம் ஆர்.ஆர்.பிரியாணி நிறுவனர் ரா.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 20 ஆளுமைகளின் வெற்றிக் கதைகள் இந்த நேர்காணல்கள் வழியாக பதிவாகியுள்ளன.

இப்படித்தான் ஜெயித்தார்கள்: ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள்
மோ.கணேசன்
வெளியீடு: இளையோர் இலக்கியம், விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம், சென்னை - 18
விலை: ரூ.230, தொடர்புக்கு: 044-24332424

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் தாமஸ் ஹார்டியின் ‘The Mayor of Casterbridge’ நாவலின் மொழிபெயர்ப்பு இது. 1886-ல் வெளியான இந்த நாவல் காஸ்டர்பிரிட்ஜ் என்னும் கற்பனை நகரத்துக்கு மைக்கேல் ஹெஞ்சர்ட் என்னும் சாமானியன் மேயராக உயர்வதையும் அதன் பிறகு அவன் அடையும் வீழ்ச்சியையும் மையமாகக் கொண்டது. 1953-ல் வெளியான இந்த மொழிபெயர்ப்பு தற்போது மூன்றாம் பதிப்பைக் கண்டிருக்கிறது.

நகரத் தலைவர், தாமஸ் ஹார்டி
தமிழில்: அப்துற்-றஹீம்
வெளியீடு: யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்,
சென்னை – 17, விலை: ரூ.140
தொடர்புக்கு: 94440 47786

தமிழ்ச் சான்றோர் கலைகளை அறுபத்து நான்காக வகைப்படுத்தினர். இந்த அறுபத்து நான்கு கலைகளின் சிறப்புகள், அவை மனித வாழ்வில் ஆற்றும் பங்கு, அதனால் மனித வாழ்வு எப்படிப் பொலிவுறுகிறது என்பதையும் இந்தக் கலைகள் தமிழர் வாழ்வில் எவ்வாறு சிறந்து விளங்கின என்பதையும் இலக்கிய மேற்கோள்களுடன் விளக்குகிறது இந்நூல்.

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு
புலவர் செந்துறைமுத்து
வெளியீடு: முல்லை பதிப்பகம், சென்னை-40
விலை: ரூ.500
தொடர்புக்கு: 98403 58301

மகாபாரதத்தில் அதன் ஆசிரியரான வேதவியாசரால் தருமருக்குக் கூறுவதாக அமையப்பெற்றுள்ள நளன் கதையின் சிறப்பை உணர்ந்து ‘நைஷதம்’ என்னும் பெயரில் அக்கதையை வடமொழியில் காவியமாக்கினார் ஸ்ரீஹர்ஷர். 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் ‘நளவெண்பா’ என்னும் பெயரில் வெண்பா யாப்பு வடிவத்தில் நளன் கதையைத் தமிழுக்குக் கொண்டுவந்தார். ‘நளவெண்பா’வுக்கு புலியூர் கேசிகன் 1961-ல் எழுதிய உரை பல பதிப்புகளைக் கண்டு 2020-ல் புதிய பதிப்பாக வெளியாகியிருக்கிறது.

நளவெண்பா, புகழேந்தி
தெளிவுரை: புலியூர்க் கேசிகன்
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
சென்னை – 17, விலை: ரூ.150
தொடர்புக்கு: 044-2433 1510

தமிழ்நாட்டின் முகவூர் என்ற சிறு கிராமத்தில் விவசாயியின் பேரனாகப் பிறந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து, மனிதர்களுக்கி டையிலான தகவல் பரிமாற்றத்துக்கான மின்னஞ்சலைக் கண்டுபிடித்ததால் ‘இமெயில் தமிழன்’ என்று அழைக்கப்படும் விஞ்ஞானி சிவா அய்யாதுரையின் வாழ்க்கை வரலாறு இது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் சிவா அய்யாதுரையுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்று இந்த நூலை எழுதியுள்ளார் விஜய் ராணிமைந்தன்.

இமெயில் தமிழன் - சிவா அய்யாதுரையின் உத்வேக
வாழ்க்கைப் பதிவு, விஜய் ராணிமைந்தன்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை-17, விலை: ரூ.120
தொகுப்பு: கோபால்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in