Published : 19 Mar 2022 06:36 AM
Last Updated : 19 Mar 2022 06:36 AM
மு.வெ. என்னும் பெயரில் கவிதைகள் எழுதும் மு.வெங்கடேசன் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி-எம்) திட்டத் தொடர்பாளராகப் பணிபுரிந்தவர். இது அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு.
சொல் கேளா சொற்கள், மு.வெ.
படி வெளியீடு, விற்பனை உரிமை:
டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.120
தொடர்புக்கு - 87545 07070
‘5 ட்ரில்லியன் டாலர் எகானமி’ என்னும் பொருளாதார வளர்ச்சி இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கத் தொடங்கியிருக்கும் வேளையில் தனிமனிதர்களின் வளர்ச்சியின் மூலம்தான் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும் என்னும் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள நூல்.
கோடிகளைக் கொட்டும் சக்சஸ் ரகசியங்கள்
இராம்குமார் சிங்காரம்
வெளியீடு: யா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.150, தொடர்புக்கு - 98409 96745
க.நா.சு., தான் நடத்திவந்த ‘இலக்கிய வட்டம்’ பத்திரிகையில் 1963-65 காலகட்டத்தில் எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு. 1985-ல் முதல் பதிப்பு வெளியானபோது, சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற நூல் இது.
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
க.நா.சுப்ரமண்யம்
வெளியீடு: தேநீர் பதிப்பகம்
விலை: ரூ.180, தொடர்புக்கு - 90809 09600
ஊரடங்கு காலத்தில் தான் வாசித்த ஜென் கதைகள், ஓஷோவின் நூல்கள், பிற புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து ஞானம் பற்றி தனக்கு ஏற்பட்ட கருத்துகளை விளக்கும் விதமாக நூலாசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு.
சுகமாய் ஒரு ஞானம்
நந்தவனம் சந்திரசேகரன்
வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ரூ.100, தொடர்புக்கு: 94432 84823
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் தன் சகோதரன் அட்டதத்தனால் ஈழத் தீவிலிருந்து நாடு கடத்தப்படும் இளவரசன் மானவன்மன், மாமன்னர் நரசிம்ம பல்லவரிடம் தஞ்சம் புகுந்து, புலிகேசியை வீழ்த்துவதில் அவருக்கு உதவுகிறான். ஈழ இளவரசர்கள் அட்டதத்தன், மானவன்மனுக்கிடையே எழுந்த பூசல்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சரித்திர நாவல் இது.
நாகத்தீவு - சரித்திர நாவல்
அல்போன்ஸ் அப்பாவு
வெளியீடு - வெற்றிமொழி வெளியீட்டகம்,
விலை: ரூ.555, தொடர்புக்கு: 97151 68794
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT