

இந்திய கிராமங்களின் குறுக்குவெட்டுத் தோற்றம் தனது நாற்பதாண்டு கால இதழியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்திய ஊரகங்களைப் பற்றி எழுதுவதிலும் அதற்காக நெடும்பயணங்களை மேற்கொள்வதிலும் செலவிட்டவர் பி.சாய்நாத். ஊரக வறுமைநிலை குறித்த அவரது இந்த நூல் பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றது. இந்நூலில் உள்ள கட்டுரைகள், இந்தியாவின் மிக ஏழ்மையான மாவட்டங்களிலிருந்து அவர் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. பள்ளிக் கல்வி, உடல்நலன், வறுமை, குடிநீர்த் தட்டுப்பாடு ஆகிய அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி இவை விவாதிக்கின்றன. இந்தியக் கிராமங்களைப் பற்றி நடத்தப்பட்டிருக்கும் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி இது.
ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்
பி.சாய்நாத்
தமிழில்:
ஆர்.செம்மலர்
பாரதி புத்தகாலயம்,
விலை: ரூ.550