

இலங்கையின் வராத்துப்பளை என்னும் சிற்றூரில் 1929-ல் பிறந்து 2018-ல் மறைந்தார் எழுத்தாளர் என்.கே.ரகுநாதன். இருபதாம் வயதில் தொடங்கி இவருடைய எழுத்துப் பணி ஈழத்தில் நிலவிய சாதியத்துக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான இயக்கமாகவே இருந்தது. ரகுநாதனின் சிறுகதைகள், நாடகம், நாவல், கவிதைகள், கடிதங்கள், நேர்காணல்கள், அவருடன் பழகியவர்களின் நினைவுக்குறிப்புகள், அவரது மறைவுக்குப் பின் எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் என அனைத்தையும் இணைத்து முழுத்தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. என்.கே.ரகுநாதனின் படைப்புகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையுடன் புறக்கணிக்க முடியாத ஒரு கோணத்தை இணைத்துப் பார்க்கத் தூண்டுகிறது.
என்.கே.ரகுநாதம்
தொகுப்பு: கற்சுறா
கருப்புப் பிரதிகள் வெளியீடு
விலை: ரூ.1,300