

பாரதி நினைவு நூற்றாண்டு சமீபத்தில்தான் முடிவடைந்தது. பாரதியின் கவிதைகளை வெளியிடாத பதிப்பகங்களே இல்லை என்றாலும் பாரதியின் தீவிர வாசகர்கள் பெரிதும் நாடுவது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வுப் பதிப்பைத்தான். காலவரிசைப்படுத்தப்பட்ட கவிதைகள், பாடபேதங்கள், பிற குறிப்புகள் என்று மிகவும் பயனுள்ள பதிப்பு இது. சீனி.விசுவநாதனால் தொகுக்கப்பட்ட கவிதைகளை ம.ரா.போ.குருசாமி பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டிருக்கிறார். விலையும் குறைவு. பாரதி அன்பர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய
தொகுப்பு இது!
பாரதி பாடல்கள்: ஆய்வுப் பதிப்பு
பதிப்பாசிரியர்:
ம.ரா.போ.குருசாமி
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு
விலை: ரூ.650