

சிறை வாழ்க்கையைப் பற்றிப் பெரும்பாலும் நமக்கு அறிமுகமானதெல்லாம் சிறைத் தண்டனை அனுபவித்தவர்களின் பதிவுகளின் வழியாகத்தான். காந்தி, நேரு, வ.உ.சி. போன்றோரில் ஆரம்பித்து நம் காலத்தில் மு.கருணாநிதி, நல்லகண்ணு வரை பல தலைவர்கள் தங்கள் சிறையனுபவங்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிறைக் காவலரின் பார்வை வழியாக சிறையானது பதிவுசெய்யப்பட்டிருப்பது அரிது. அவ்வகையில் இந்த நூல் முக்கியமானது. அதுவும் மனிதநேயமிக்க சிறைக் காவலர் என்பது கூடுதல் சிறப்பு.
சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
ஒரு சிறைக் காவலரின் அனுபவப் பதிவுகள்
மதுரை நம்பி
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.330