

தேசிய இனம்: தெளிவான புரிதலுக்கு மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவைக் குறித்து விவாதங்கள் எழும்போதெல்லாம் வழக்கறிஞரும் திருக்குறள் அறிஞருமான கு.ச.ஆனந்தனின் ‘மலர்க மாநில சுயாட்சி’ நூல் மேற்கோள் காட்டப்படுவது வழக்கம்.
அரசமைப்பு பார்வையில் எழுதப்பட்டது அந்த நூல். மாநிலத்தின் அரசியல் உரிமைகள், தேசிய இனங்களின் பண்பாட்டு உரிமைகளாகவும் இருக்கின்றன என்பதை விளக்கும் அவரது மற்றொரு நூல் ‘இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்’. இந்திய அளவில் தேசிய இனப் பிரச்சினைகளையும் தமிழ்த் தேசியத்தின் விரிவான வரலாற்றையும் உள்ளடக்கியது இந்நூல்.
இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும்
கு.ச.ஆனந்தன்
தங்கம் பதிப்பகம்
விலை: ரூ.650