

திரையுலகில் 40 ஆண்டுகள் வெற்றிகரமான நடிகராக முத்திரை பதித்தவர் சிவகுமார். திரைக்கு வெளியே ஓவியத் துறை, மேடைத் தமிழ் எனத் தன்னுடைய பன்முகத் திறன்களை வெளிப்படுத்தியவர், எழுத்துத் துறையையும் விட்டுவைக்கவில்லை. அவரது நூல்களில் முதன்மையானது ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற தன்னடக்கத்துடன் வெளியான அவருடைய சுயசரிதை. ‘‘ஒரு சங்கீத வித்துவான், இன்னொரு வித்துவானைப் பாராட்ட மாட்டார். ஒரு எழுத்தாளர், இன்னொரு எழுத்தாளரைப் பாராட்ட மாட்டார். ஆனால், சிவகுமார் தன்னுடன் பயணித்த, தனக்கு நிகரான வெற்றிகளைப் பெற்ற பலரைக் குறித்து, மிகப் பெரிய கௌரவத்தையும் பாராட்டையும் கொடுத்து எழுதியிருக்கிறார்” என்று இதன் சிறப்பு பற்றி நடிகரும் பத்திரிகையாளருமான சோ கூறியுள்ளது முற்றிலும் உண்மை.
இது ராஜபாட்டை அல்ல
சிவகுமார்
அல்லயன்ஸ் கம்பெனி
விலை: ரூ.600