

நதிகளின் கரைகளில்தான் நாகரிகங்கள் உருவாகி வளர்கின்றன என்கிறது வரலாறு. தமிழ்நாட்டின் வரலாறும் நதிக்கரைகளையும் கடற்கரைகளையும் மையமாகக் கொண்டதுதான். தொண்டை நாடு, நடு நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு, சேர நாடு மட்டுமின்றி ஈழநாட்டில் ஓடும் நதிகளையும் அவற்றின் கரைகளில் அமைந்திருக்கும் நகரங்களையும் பற்றிய எளிய அறிமுகம் இந்தப் புத்தகம். சொல்லாராய்ச்சி, இலக்கிய மேற்கோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நூல், இன்றைய காலகட்டத்தில் சூழலியல் முக்கியத்தையும் பெற்றுள்ளது.
ஆற்றங்கரையினிலே
ரா.பி.சேதுப்பிள்ளை
சீதை பதிப்பகம்
விலை: ரூ.125