உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்? - யாழ்ப்பாண அகராதி

உங்களிடம் இருக்கிறதா இந்தப் புத்தகம்? - யாழ்ப்பாண அகராதி
Updated on
1 min read

தமிழில் நாம் அறிந்த சொற்களைக் கணக்கிட முடியுமா? உண்மையில், லட்சக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலான சொற்கள் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டாலும் இலக்கியங்களிலும் நிகண்டுகள், அகராதிகள் போன்றவற்றிலும் அந்தச் சொற்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அவை போன்ற 58,500 சொற்களுக்கான பொருளுடன் 1842-ல் வெளியான முக்கியமான அகராதிகளுள் ஒன்றுதான் ‘யாழ்ப்பாண அகராதி’. சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை ஆகிய இரண்டு இலங்கைத் தமிழறிஞர்கள் தொகுத்த இந்தப் புத்தகம், இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டன. அந்த அகராதியைத் தேடிப்பிடித்துத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

யாழ்ப்பாண அகராதி
(இரண்டு தொகுதிகள்)
சந்திரசேகரப் பண்டிதர்,
சரவணமுத்துப் பிள்ளை
விலை: ரூ.620
வெளியீடு:
தமிழ்மண் பதிப்பகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in