புத்தகத் திருவிழா 2022 | புத்தக அட்டைகளைச் சிறகாகக் கொண்ட வானம்பாடி

புத்தகத் திருவிழா 2022 | புத்தக அட்டைகளைச் சிறகாகக் கொண்ட வானம்பாடி
Updated on
1 min read

வானம்பாடி வகைப் பறவைகளைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் ‘லார்க்’ (Lark). புத்தகங்களுக்கான அட்டை வடிவமைப்பாளர் லார்க் பாஸ்கரன், புத்தக அட்டைகளின் வழியே பறப்பவர். இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வந்துள்ள பல புத்தகங்களுள் 160 புத்தகங்களுக்கு அட்டைகளை வித்தியாசமான முறையில் வடிவமைத்து, வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் லார்க் பாஸ்கரன். சின்ன சேலத்தைச் சேர்ந்த சென்னைவாசியான இவர், பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார். 50-க்கும் மேலான திரைப்படங்களின் டிசைனராகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் ஒரு கவிஞரும்கூட. இதுவரை 5 தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். லார்க் பாஸ்கரன் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in