

அஷ்டாவக்கிரர், அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து சத்தியம் என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணிதான் அனைவருக்கும் இல்லை. நன்மை, தீமை, கருத்தியல், விருப்பு வெறுப்புகள், ஆசைகள், அச்சங்களால் மனிதர்களும் சமூகங்களும் தேசங்களும் தங்களுக்குள் போரிட்டு மாயும் காலம் இது. மனிதர்கள் பரஸ்பரம் நேசிக்க மறந்துவிட்ட சூழலில், தஞ்சாவூர்க் கவிராயர் நம்மையும் உள்ளடக்கிய இந்த உலகத்தை, சக உயிர்களை, இயற்கையை, மனிதர்களை, புலப்படுவதை புலப்படாததை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் தந்திருக்கும் சாவி ‘அகத்தைத் தேடி’. சென்னை புத்தகக் காட்சியில் நூலைப் பெற - ‘இந்து தமிழ் திசை’
அரங்குகள்: 125-126, M 11
அகத்தைத் தேடி
தஞ்சாவூர்க்
கவிராயர்
இந்து தமிழ் திசை
வெளியீடு
விலை: ₹200