Published : 12 Feb 2022 12:22 PM
Last Updated : 12 Feb 2022 12:22 PM
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜே.வி.நாதன் இதுவரை 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். இவருடைய 70 சிறுகதைகள் கன்னடம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ விருதை ஜே.வி.நாதன் மூன்று முறை பெற்றிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகின் முன்னோடிகளில் ஒருவரான மௌனியைப் பற்றி ‘மௌனியின் மறுபக்கம்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் இரண்டாவது தொகுப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ஆனந்த விகடன், குமுதம், மாலைமதி, சிநேகிதி, குமுதம் பக்தி ஸ்பெஷல், ராணி, ராணி முத்து, தினமலர் ஆகிய இதழ்களில் வெளிவந்த 40 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்புக்கு எழுத்தாளர் ராஜேஷ்குமார் பொருத்தமானதொரு அணிந்துரை வழங்கியிருக்கிறார்.
ஜே.வி.நாதன் சிறுகதைகள்-2
ஜே.வி.நாதன்
வெளியீடு:
அந்தரி பதிப்பகம், கோயம்புத்தூர்-641002.
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9003838601
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT