

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த லூசி தொடங்கி, குவாடமாலாவின் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி, அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பூர்வகுடிப் பெண் ரிகொபெர்தா மிஞ்சு, கரோனா பெருந்தொற்றிலிருந்து தன் நாட்டு மக்களைப் பெரிதும் காப்பாற்றிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உள்ளிட்ட சம கால ஆளுமைகள் வரை மனிதகுல வரலாற்றில் உலகை வடிவமைத்த 30 பெண்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு.
முதன்மைப் பெண்கள் 30 பேர்
சரவணன் பார்த்தசாரதி
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன், சென்னை - 600 018
விலை: ரூ.90
தொடர்புக்கு: 044-24332424
அபுதாபி ஒழுங்குமுறை ஆணையத்தின் சூழலியல் அமைப்பு திட்டப்பணிக் குழுத் தலைவரான துரை ஆனந்த் குமார் சிறார்களுக்கான கதைகளை எழுதுவதோடு, சிறார் எழுதிய கதைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார். குழந்தைகள் தன்னிடம் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்குப் பதில் அளிக்கும் விதமாகத் தன் சொந்த அனுபவங்களையும் தான் தெரிந்துகொண்ட விஷயங்களையும் அறிவியல் கருத்துகளையும் சேர்த்து அவர் எழுதியுள்ள 12 கதைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆகச்சிறந்த வீரன்
துரை ஆனந்த் குமார்
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9940446650
மாயாஜாலக் கதைகள், விலங்குகளைப் பற்றிய கதைகள் என்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களைப் பற்றிய 14 கதைகளின் தொகுப்பு. ‘சர்க்கஸ் பார்க்கப் போன ரதி’, ‘யானையைத் தொட்டுப் பார்ப்போமா?’, ‘கட்டை விரல் அளவு குட்டி விலங்குகள்’, ‘மந்திரம் தீர்ந்து போச்சு’ என கதைகளின் தலைப்புகளே ஈர்க்கக்கூடியவையாக அமைந்துள்ளன.
மந்திரக் கிலுகிலுப்பை
சரிதா ஜோ
வெளியீடு: சுவடு பதிப்பகம், சென்னை- 59
விலை - ரூ.120
தொடர்புக்கு: 9551065500
ஒசாமா பின்லேடனின் ஆதிக்கம், ஆப்கனில் முளைத்த பயங்கரவாதக் குழுக்கள் என தாலிபான்களின் வரலாற்றையும் அதன் மூலமாகக் கடந்த 40 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த மாற்றங்களையும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிடமிருந்து ஆப்கன் எதிர்கொண்ட அழுத்தங்களையும் விளக்கும் விதமாக எழுதப்பட்ட 19 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல்.
ஆப்கானிஸ்தான் - புரியாத போர்களின் தொடர் சங்கிலி -நேற்றும் இன்றும்
ஜெகாதா
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை- 17
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044-24331510
கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ‘வானத்தில் கோலமிட்டு’, ‘உன் கண்னில் நூறு நிலா’ ஆகிய இரண்டு நாவல்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. இரண்டு நாவல்களும் அவை வெளியான காலத்தில் அதிக வாசகர்களைச் சென்றடைந்தவை.
வானத்தில் கோலமிட்டு
ராஜேஷ்குமார்
வெளியீடு: அமராவதி, சென்னை - 17
விலை - ரூ.120
தொடர்புக்கு: 9444169725