

வாழ்க்கைத் துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது, தம்பதிகள் அன்புடன் இருக்க என்ன செய்ய வேண்டும். ருசியாகச் சமைப்பது எப்படி, சண்டையைத் தவிர்ப்பது எப்படி என திருமண உறவில் இருப்பவர்களுக்கு எழக்கூடிய பல கேள்விகளுக்கு இந்நூலில் விரிவாக விடையளிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி நிறைந்த மணவாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
பி.எஸ்.ஆர்.ராவ்
நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை - 600 017
விலை - ரூ.100, தொடர்புக்கு - 98402 26661
1,330 குறள்களில் வாழ்வுக்கு வழிகாட்டுவனவாகத் தன் கண்ணுக்குப்பட்ட 62 குறள்களைத் தேர்ந்தெடுத்து தன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் இலக்கிய நூல்களிலிருந்து மேற்கோள்களையும் இணைத்து அவற்றுக்கு நூலாசிரியர் விளக்க உரை எழுதியுள்ளார்.
வழிகாட்டும் வள்ளுவம், பழ.சபாரெத்தினம், பாரதி புத்தகாலயம், சென்னை – 600018, விலை: ரூ.165, தொடர்புக்கு: 044-24332424
சிறுவர்களுக்கான பல நூல்களைப் படைத்திருக்கும் நூலாசிரியர் எழுதிய 10 சிறார் கதைகளின் தொகுப்பு இது. எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும் குழந்தைகளுக்கான நீதிநெறி போதனைகளை வழங்குகிறது. கதைகளுக்கான ஓவியங்களை ஓவியர் கி.சொக்கலிங்கம் வரைந்துள்ளார்.
காகமும் நான்கு மீன்களும், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், சென்னை - 600 092. விலை: ரூ.65. தொடர்புக்கு: 89383 87276
தாவரவியல் பேராசிரியரும் சென்னையில் உள்ள எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டி.ராஜா சுற்றுச்சூழல் ஆர்வலரும்கூட. தன் வாழ்க்கை அனுபவங்களையும் சுற்றுச்சூழல் குறித்தும் அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நூலில் பதிவுசெய்துள்ளார்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் சுகமான வாழ்வும்
ஜி.ராஜா, மணிமேகலைப் பிரசுரம்,
சென்னை - 600 017. விலை: ரூ.480, தொடர்புக்கு: 044-2434 2926
ஆங்கில எழுத்துகளின் உச்சரிப்பு, சொற்கள், வாக்கியங்கள், இலக்கணப் பிரிவுகள், பழமொழிகள், மரபுத் தொடர்கள், சுருக்கெழுத்துகள் என ஆங்கிலத்தைத் தொடக்கத்திலிருந்து கற்க விரும்புகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பல்வேறு விஷயங்களைத் தமிழ் வழியாக விளக்குகிறது இந்நூல்.
பாரதி தமிழ்வழி ஆங்கிலம் கற்றல் வழிகாட்டி
கா.அருச்சுனன், எம்பவர் பதிப்பகம், காவேரிப்பட்டணம்-635112, விலை: ரூ.200
தொடர்புக்கு: 94421 84864