

சுயசரிதைக்கு இணையான பொறுப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நினைவலைகள் தொகுப்பு. ஷாஜகான், தான் படித்து ரசித்தது, தான் அவமானப்பட்டது, தான் பாராட்டப்பட்டது அனைத்தையும் எளிமையான நடையில் பதிவுசெய்திருக்கிறார். சாலை விபத்துகள், ‘தூல் கா ஃபோல்‘ இந்திப் படப் பாடல், கடித இலக்கியம், தாராபுரத்தில் உள்ள சித்தி வீடு, கணக்கு வாத்தியார்... என்று அவரது நினைவலைகளில் மிதக்கும் தகவல்கள் சுவையான டைரிக் குறிப்புகளாகச் சுவையூட்டுகின்றன.
இது மடத்துக் குளத்து மீனு…
ஷாஜகான்
விலை: ரூ. 215
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி) லிட்., சென்னை 98
044-2624 1288
- மானா