

சிலம்புச் செல்வர் ம.பொ.சி. என்னும் ம.பொ.சிவஞானத்தின் பொன்விழா 1956 ஜூன் 26 அன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவின் நிகழ்வுகள், அறிஞர்கள் ஆற்றிய கருத்துரைகள், விழா குறித்த பத்திரிகைச் செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பு
தமிழகம் தந்த ம.பொ.சி.
தொகுத்தவர் - முல்லை முத்தையா
முல்லை பதிப்பகம், சென்னை-40
விலை: ரூ.120. தொடர்புக்கு - 9840358301
சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங்கைப் பற்றிய நூல் இது. 15-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள குரு கோவிந்த் சிங் இலக்கியம், ஆன்மிகம், சமூகச் சீர்திருத்தம் ஆகிய துறைகளில் ஆற்றிய பணிகளை விரிவான சான்றுகளுடன் இந்த நூல் விவரிக்கிறது.
குரு கோவிந் சிங்
மஹீப் சிங், தமிழாக்கம் - அலமேலு கிருஷ்ணன்
சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ்,
443, அண்ணா சாலை, சென்னை - 18. விலை: ரூ.50
‘தி இந்து’ குழுமத்தின் ‘காமதேனு’ வார இதழ், ‘ஆனந்த விகடன்’, ‘குங்குமம், ‘ராணி முத்து’ ஆகிய வெகுஜன இதழ்கள், ‘தாமரை’, ‘கணையாழி’ உள்ளிட்ட சிற்றிதழ்களில் வெளியான புகழேந்தியின் கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
அறுபது கவிதைகள், அய்யாறு.ச.புகழேந்தி
பாரதி பித்தன் பதிப்பகம்,
தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம்,
தஞ்சாவூர் - 613 010. விலை: ரூ.60
தொடர்புக்கு - 9443736480
ஜவ்வாது மலையில் மலைவாழ் மாணாக்கர்களுக்குப் பாடம் எடுக்கும் பட்டதாரித் தமிழாசிரியர் க.ஜெய்சங்கர். பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் 10,11,12-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்திலும் பிற பாடங்களிலும் அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கான வழிகாட்டுதல்களை இந்த நூலில் வழங்கியுள்ளார்.
தேர்வை ரசிப்போம்.. மதிப்பெண் குவிப்போம்
க.ஜெய்சங்கர்
வசந்தவேல் பதிப்பகம்,
வடமாத்தூர்: 606 702
விலை: ரூ.80
தொடர்புக்கு: 97864 72148
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் 31 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரான முனைவர் கரு.முத்தய்யா தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலைக்கு எழுதிய உரைநூல்.
மணிமேகலை
(முதல் பாகம்)
உரை: கரு.முத்தய்யா
கோவிலூர் மடாலயம், சென்னை - 33
விலை: ரூ.300
தொடர்புக்கு: 98403 58301
- தொகுப்பு: கோபால்