குறுநோக்கு: பக்தித் தமிழ் தொகுப்பு

குறுநோக்கு: பக்தித் தமிழ் தொகுப்பு
Updated on
1 min read

தமிழர் வழிபாட்டு மரபில் பக்திப் பாடல்களுக்குத் தனித்த இடம் உண்டு. கவிஞர் மு.தவசீலன் எழுதியுள்ள பக்திப் பாடல்களின் தொகுப்பு இந்நூல். திரைப்படங்களிலும் பாடல்களை எழுதியிருப்பவர் என்றாலும் பக்திப் பாடல்களுக்காகவே அறியப்படுபவர் தவசீலன். அவர் எழுதிய பாடல்களை பி.சுசீலா, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி சிவசிதம்பரம், கே.வீரமணி உள்ளிட்ட புகழ்பெற்ற பல பாடகர்கள் பாடியுள்ளனர். குன்னக்குடி வைத்தியநாதன், வி.குமார், எச்.எம்.வி. ரகு உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். பண்டிகை நாட்களில் வீடுகளிலும் கோயில் திருவிழாக்களிலும் ஒலித்த எண்ணற்ற பாடல்கள் தவசீலன் எழுதியவை. அவை முதல்முறையாக நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழ்வழி வழிபாடு அரசியல் களத்திலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கும் காலத்தில் இந்தத் தமிழ்த் துதிப் பாடல்களின் தொகுப்பு வெளிவந்திருக்கிறது.

தெய்வங்கள் கேட்கவரும் தேனிசைப் பாடல்கள்

கவிஞர் மு.தவசீலன்

வானதி பதிப்பகம்

விலை: ரூ.120

தொடர்புக்கு: 044-24342810

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in