நூல்நோக்கு: துயரங்களை எதிர்கொள்வதற்கான பயிற்சி

நூல்நோக்கு: துயரங்களை எதிர்கொள்வதற்கான பயிற்சி

Published on

இந்த நூலின் ஆசிரியரான ரவி வல்லூரி, இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் இந்திய ரயில்வேயில் பணியாற்றிவருகிறார். ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் ‘வாழும் கலை’ இயக்கத்தில் ஆசிரியராகச் செயல்பட்டுவருகிறார். கடந்த இரண்டாண்டுகளில் பெற்றோர் இருவரையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்திருக்கிறார். கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளும் துரதிர்ஷ்டங்களும் நிறைந்த இந்த வாழ்வின் இருண்ட பக்கங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வையும் பக்குவப்பட்ட மனநிலையையும் அடைவதற்கு ஆன்மிகப் பாதையில் வழிகாட்டும் வகையில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய 50 கட்டுரைகள் ‘மேஜிக் ஆஃப் த மைண்டு’ என்னும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதை சுசர்ல வெங்கட்ரமணி தமிழாக்கம் செய்துள்ளார். யோகாசனம், பிராணாயாமம், தியானம், மந்திர உச்சாடனம், சுதர்சனம் கிரியா எனும் சுவாசப் பயிற்சி ஆகியவற்றின் மூலம் மனத்தின் ஊசலாட்டங்களை சரியான முறையில் வெற்றிகொள்ள இந்தக் கட்டுரைகள் உதவும்.

மனம் செய்யும் மாயவித்தை
ரவி வல்லூரி
மணிமேகலை பிரசுரம், சென்னை-600017
விலை- ரூ.260
தொடர்புக்கு – 044 2434 2826

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in