

மகாஸ்வேதா தேவியின் ‘1084ன் அம்மா’ நாவலைச் சமீபத்தில் வாசித்தேன். யாராலும் நேசிக்கப்படாத ஒரு மகன் திடீரென இறந்துவிட அவனது தாயின் பார்வையில் அவனுடைய வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. நக்ஸலைட்டாக, போலீசால் தேடப்படும் குற்றவாளியாகத் தன் மகன் எப்படி மாறினான், அவனுடைய கடைசி நாட்கள் எப்படிக் கழிந்தன என்பதையெல்லாம் தேடிச் செல்லும் தாயின் பயணம்தான் நாவல்.
மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை மொழி பெயர்த்துக்கொண்டிருக்கிறேன். சங்க காலப் பாணர், கூத்தர்களின் ஆற்றுப்படையாக உரைநடையில் வந்துள்ள நாவல், பாரியின் படுகொலையைக் கதைக்களனாகக் கொண்டது.