

கடந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆ. மாதவன் எழுத்துகளைப் பற்றிய கட்டுரைத் திரட்டு இந்தப் புத்தகம். நகுலன், கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் பார்வையில் ஆ. மாதவனின் வெவ்வேறு பரிமாணங்கள் இந்நூலில் வெளிப்பட்டிருக்கின்றன. ‘புதுமைப்பித்தனுக்கும் ஜி. நாகராஜனுக்கும் இடைப்பட்ட ஒரு யதார்த்தவாதியாக ஆ. மாதவனைச் சொல்லலாம். மனிதனின் அந்தரங்கங்களைக் கண்டு சொல்வதில் மிகுந்த ஆசை கொண்டவர் இவர்’ என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பது துல்லியமான மதிப்பீடு என்றே சொல்லத் தோன்றுகிறது.