காப்பியங்களின் கடல்

காப்பியங்களின் கடல்
Updated on
1 min read

திராவிட மொழிக் குடும்பம் என்பது உலகின் மிகச் சிறந்த இலக்கியங்கள் பலவற்றையும் கொண்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ‘திராவிட மொழிகளில் காப்பியங்கள்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் திராவிட மொழிகளின் காப்பியங்களைப் பற்றி 221 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவை தொகுக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தக் கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. திராவிட மொழிகளின் இலக்கிய வீச்சை உணர்த்தும் நூல் இது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in