

தனியார்மயமே வங்கிகளைக் காப்பாற்றும் என்ற மாயை பூதாகரமாக உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் அதை அடித்து நொறுக்குகிறது சி.பி. கிருஷ்ணன் எழுதிய இந்தச் சிறு நூல்.
இந்திய வங்கித் துறையின் 250 ஆண்டு கால வரலாற்றைச் சொல்வதுடன் தற்போது வங்கித் துறை எதிர்கொண்டிருக்கும் பேரபாயங்களைப் பற்றியும் எச்சரிக்கிறது.
1947-1969-க்கு இடைப்பட்ட காலத்தில் 648 வங்கிகளில் 558 வங்கிகள் மஞ்சள் கடுதாசி கொடுத்தன என்ற தகவல் மூலமாகத் தனியார் வங்கிகளின் உண்மையான நோக்கம் மக்களின் பணத்தை வாரிச்சுருட்டுவதே என்பது நமக்கு உறுதிப்படுகிறது.
முற்றிலும் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகவும், மக்களுக்கு எதிராகவும் தனியார் வங்கிகள் செயல்பட்டுக்கொண்டிருப்பதையும் சி.பி. கிருஷ்ணன் தோலுரித்துக்காட்டுகிறார்.
வங்கித் துறையைச் சேர்ந்த ஒருவரே இப்படி எழுதியிருப்பது நூலின் நம்பகத்தன்மைக்கு வலு சேர்க்கிறது. இதைப் போலவே, பொதுத்துறை நிறுவனங்கள் எப்படிப் படிப்படியாக அரசாங்கங்களால் நசுக்கப்பட்டு அதற்குப் பதிலாகத் தனியார் துறைக்கு எப்படிக் கம்பளம் விரிக்கப்படுகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்க வேண்டிய கடமை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் மற்ற நேர்மையாளர்களுக்கும் உள்ளது. -
வங்கியில் போட்ட பணம்
சி.பி. கிருஷ்ணன்
விலை: ரூ. 15
வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை-18.
தொடர்புக்கு: 044 2433 2424, thamizhbooks @gmail.com