

கவிஞர் திருநங்கை ரேவதி எழுதிய ‘வெள்ளை மொழி’ சுயசரிதை நூலை சமீபத்தில் படித்தேன். தமிழ்ச் சமூகத்தில் திருநங்கைகள் ஒடுக்கப்படுவதை இந்நூல் நெஞ்சு பதறும் வகையில் பதிவு செய்துள்ளது. இந்தச் சமூகமும் அரசும் ஒரு திருநங்கையை எவ்விதம் பார்க்கிறது என்பதைத் திருநங்கை ஒருவரின் மொழியுனூடாக வாசிக்கையில், இந்த நிலை மாற்றப்பட ஏதாவது செய்ய வேண்டுமென்கிற உத்வேகத்தை எனக்குள் ஏற்படுத்தியது இந்நூல்.
எனது 15 வயது தொடங்கி, இன்றுவரை 57 வகையான தொழில்களைச் செய்துள்ளேன். அவை அனைத்துமே விளிம்புநிலை மனிதர்களைக் களமாகக் கொண்டு செய்யும் தொழில்கள். இந்த விளிம்புநிலை அனுபவங்களை 57 அத்தியாயங்கள் கொண்ட நாவலாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த நாவலுக்கு ‘மயிரப் புடுங்கின கதை’ என்று பெயர் வைக்கலாமென்று உள்ளேன்.
கவனிக்கிறோம்!
தீவிரமான படைப்பு முயற்சிகள், புனைவுகள் குறித்த விரிவான விமர்சனங்கள், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த அலசல்கள், நேர்காணல் எனச் சிற்றிதழ்களுக்கான ஆகிவந்த களத்தில் இயங்கிவருகிறது ‘திணை’ காலாண்டிதழ். ஆசிரியர்: வி.சிவராமன். | தொடர்புக்கு: 9894817439.