Published : 10 Jul 2021 07:06 AM
Last Updated : 10 Jul 2021 07:06 AM
ஒவ்வொரு இறகிலும் ஒரு வனம்
சா.தேவதாஸ்
நூல்வனம் வெளியீடு
ராமாபுரம், சென்னை-89.
தொடர்புக்கு: 91765 49991
விலை: ரூ.260
மூத்த எழுத்தாளர் சா.தேவதாஸின் புதிய நூல் ‘ஒவ்வொரு இறகிலும் ஒரு வனம்’. டாவின்ஸி, சாக்ரடீஸ், பாபா ஆம்தே, வெரியர் எல்வின், செந்த் எக்சுபரி, ப்ரூஸ் சாட்வின், பேரூஸ் பூச்சாணி, பீட்டர் மத்தீசன், அன்னபூர்ணா தேவி, வோலே சோயிங்கா, எம்.எஃப்.ஹுசைன், குர்த்ஜீப், ஜெனே, திப்புசுல்தான், சூயோங் பார்க் என வெவ்வேறு தளங்களில் இயங்கிய அற்புதமான ஆளுமைகளின் புதிரான அம்சங்களையும், அவர்களுடைய விசித்திரமான அனுபவங்களையும் விவரிப்பதாக இந்நூலின் முதல் பகுதி அமைந்திருக்கிறது. கென்சாபுரா ஓவே, ஃபிர்தாஸ் கங்கா, சத்யா நாதெள்ள, சிறிவத்ச நெவாடியா, பாயல் பட்டாச்சார்யா, அருண் ஷோரி, ஹெலன் கெல்லர் என மிகவும் இக்கட்டான வாழ்க்கை நெருக்கடிகளைக் கொண்ட இந்த ஆளுமைகள், அந்த நெருக்கடிகளை ஒரு சவாலாக எதிர்கொண்டு, எப்படி வெற்றிகண்டார்கள் என்று விவரிப்பது இன்னொரு பகுதி. பரிச்சயமான, அதே நேரத்தில் தனிப்பட்ட தேடல்களால் அல்லாமல், அதிகம் அறியப்படாத இந்த ஆளுமைகளின் வாழ்வனுபவங்கள் மிகவும் உத்வேகமூட்டக்கூடிய விதத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த விவரிப்புகளால் உந்தப்பட்டு, ஆளுமைகள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாகத் தேடி வாசிக்க வாசகர்கள் தூண்டப்படுவார்கள். அதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படையான நோக்கமாக இருக்க முடியும். அப்படி இல்லை என்றாலும், ஒவ்வொரு கட்டுரையும் அதனளவிலேயே சுவாரஸ்யமான வாசிப்பனுபவமாகத்தான் இருக்கிறது. மிக முக்கியமான இந்த ஆளுமைகளின் விசித்திரமான அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொள்ள ஏராளம் உண்டு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT