

வண்ணங்கள் ஏழு
வா.ரவிக்குமார்
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு: 74012 96562
விலை: ₹200
வண்ணங்கள் ஏழு என்று வகைப்படுத்தினாலும் இவற்றுக்கு இடையே ஏழாயிரம் வண்ணங்களின் கலவை இருக்கத்தான் செய்கிறது. அதைப் போலவே ஆண், பெண் என்று இருபாலரை மட்டும் நாம் பெரும்பான்மைப் பாலினங்களாகச் சொல்லிக்கொண்டாலும் இடைப்பட்ட பாலினங்கள் பல உண்டு. ‘பால் புதுமையர்’ என்று அறிவியல் இவர்களை வரையறுத்தாலும், பொதுச் சமூகத்தைப் பொறுத்தவரை இவர்கள் ‘புரியாத புதிர்’. நம் மனத்தை ஆட்கொண்டிருக்கும் அந்தப் புதிரை அவிழ்க்கும் முயற்சிதான் வா.ரவிக்குமாரின் இந்நூல். மாற்றுப் பாலினத்தவர் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பான ‘பெண் இன்று’வில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. பால் புதுமையர் குறித்து நம் மனங்களில் அப்பிக்கிடக்கிற கற்பிதத்தைக் களைவதுதான் இந்நூலின் நோக்கம்.