

உலகில் பெற்றொருக்குத் தங்கள் குழந்தைகளே உலகம். தங்களது அத்தனை செல்வங்களை யும் தங்கள் பிரிய செல்வங்களுக்காகச் செலவழிக்க அவர்கள் தயாராகவே உள்ளனர். உலகம் மெச்சும் உன்னதப் பிள்ளைகளாகத் தங்கள் குழந்தைகள் வளர வேண்டும் என்பதே பெற்றோரின் இதயத் துடிப்பாக உள்ளது. ஆனால் எப்படித் தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்னும் வழிமுறைகள் தெரியாமல்தான் தடுமாறுகிறார்கள். அந்தக் குறையைப் போக்க உதவி யுள்ளார் மரியா மாண்டிசோரி.
குழந்தை வளர்ப்பு, அவர்களின் கல்வி ஆகியவை பற்றிப் பெற்றோர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அத்தனை விஷயங்களையும், அவற்றின் எல்லாக் கோணங்களையும் அலசி ஆராய்ந்து எழுதியவர் மரியா மாண்டிசோரி. இத்தனை கணமான விஷயங்களைக் கொண்டிருக்கும் நூலை அவர் மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் எழுதியுள்ளார் என்பது சிறப்பு. மூல நூலின் சாரம் கெடாமல் அந்நூலைத் தமிழ்ப்படுத்தியுள்ளார் மீனாட்சி சிவராமகிருஷ்ணன்.
இந்த நூல் குழந்தைகளின் கல்வி குறித்தும் அவர்களின் வளர்ப்பு குறித்தும் பெற்றோரின் அறிவை, புரிதலை விசாலப்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மரியா மாண்டிசோரியின் குழந்தையைப் பற்றி நாம் அறிய வேண்டியது என்ன?
தமிழில்: மீனாட்சி சிவராமகிருஷ்ணன்
முல்லை பதிப்பகம்
323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு,
சென்னை-40. தொடர்புக்கு: 9840358301