

‘உலராது பெருகும் / உலகின் விழிநீர்த் துடைக்க / ஒரு விரல் தேவை’ என்றெழுதிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் தனது எண்பதாவது வயதில் 50-வது கவிதை நூலாக இந்த நூலைப் படைத்துள்ளார்.
உலகை ஒரே குடையின்கீழ் ஒருங்கிணைத்துப் பார்க்கும் கவிமனம் கொண்ட ஈரோடு தமிழன்பனின் இந்நூலிலுள்ள கவிதைகள் அனைத்தும் உலக மனிதர்களின் உரிமைக் குரலை, வலியின் கண்ணீரை, குழந்தைகளின் நலிந்த விசும்பலை, ஒடுக்கப்பட்ட மனிதர்களின் துயரங்களை பகிர்வதாக உள்ளன.
‘செத்தவனால் என்ன செய்ய முடியும்? முடியுமெனில் இன்னும் ஒருமுறை சாகலாம்’ என்கிற வரிகளில் வெளிப்படும் பேரவலமும், ‘மரங்களின் கனவுகளில் அத்தனை இலைகளும் சிறகுகளாகிப் பறவைகளைத் தேடிப் பறக்குமோ!’ என்கிற வரிகளில் கிடைக்கின்ற பரவசமும் இத்தொகுப் பிலுள்ள பல கவிதைகளில் நமக்குக் கிட்டுகின்றன.
- மு.முருகேஷ்
திசை கடக்கும் சிறகுகள்
ஈரோடு தமிழன்பன்
விலை: ரூ.275/-
வெளியீடு : பூம்புகார் பதிப்பகம்,
சென்னை 600 108.
தொடர்புக்கு : 044 2526 7543