சிற்றிதழ் அறிமுகம்: தொல்லியலின் பல்பரிமாணம்

சிற்றிதழ் அறிமுகம்: தொல்லியலின் பல்பரிமாணம்
Updated on
1 min read

சாசனம்,
தொல்லியல் ஆய்விதழ்
ஆசிரியர்: சுகவன முருகன்
கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் வெளியீடு
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9842647101

தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் தொல்லியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகளுடன் வெளிவரும் ‘சாசனம்’ இதழ், வரலாற்று ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. 25 கட்டுரைகளுடன் வெளிவந்துள்ள இரண்டாவது இதழில் தமிழகத்தின் முதன்மையான வரலாற்று அறிஞர்களும் தொல்லியலாளர்களும் பங்கெடுத்துள்ளனர். கிண்ணிமங்கலம் பற்றிய சு.இராசவேலுவின் கட்டுரை, அதன் வரலாற்றுக் காலம் குறித்த ஐயப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. கீழடி அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவின் ஆங்கிலக் கட்டுரையுடன் வலசை, கொடுமணல் அகழாய்வுகள் குறித்த தமிழ்க் கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட புதிய கற்காலக் கற்கோடரி பற்றிய அஸ்கோ பர்பலோ கட்டுரையின் தமிழாக்கம் இவ்விதழின் முக்கியக் கட்டுரைகளில் ஒன்று. தூண்டொளிர் காலக்கணிப்பு முறைகள், நடுகற்கள், ஓவியங்கள், சரித்திர மாந்தர்கள், ஊர்களின் வரலாற்றுச் சிறப்புகள், தொல்லியல் குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்த புதிய நூல்களைப் பற்றிய விரிவான அறிமுகங்கள் என்று தொல்லியலின் பல்வேறு கோணங்களையும் உள்ளடக்கியிருக்கிறது சாசனத்தின் 2, 3-வது இதழ்களை உள்ளடக்கிய இரட்டை இதழ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in